சுவிசில் புதிய 10 பிராங்க் நாணயத்தாள்கள் விரைவில் அறிமுகம்

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து
167Shares
167Shares
Seylon Bank Promotion

சுவிஸ் மத்திய வங்கி வெளியிடவுள்ள புதிய 10 பிராங்க் நாணயத்தாள்கள் வெளியாகியுள்ளது.

இவை வருகிற 18ம் திகதி முதல் மக்கள் புழக்கத்திற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய 50 மற்றும் 20 பிராங்க் நாணயத்தாள்களை தொடர்ந்து 10 பிராங்க் நாணயத்தாள்கள் வெளியிடப்படவுள்ளது.

ஒவ்வொரு தாளிலும் சுவிட்சர்லாந்து நாட்டின் பண்புகள் வெளிப்படுவதுடன், கை மற்றும் பூமியின் உலோக உருண்டை இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக சுவிட்சர்லாந்தின் நிர்வாகத்திறமையை வெளிக்காட்டும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பழைய நாணயத்தாளுடன் ஒப்பிடுகையில் வடிவத்தில் சிறியதாகவும், பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்துள்ளது.

இதனை தொடர்ந்து 2018ம் ஆண்டளவில் 200 பிராங்க் நோட்டுகளும், 2019ம் ஆண்டில் 100 பிராங்க் நோட்டுகளும் வெளியாகும் என தெரிகிறது.

Swiss National Bank

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்