ஜனவரியில் இறுக்கமடையும் சுவிஸ்சர்லாந்தின் குடியுரிமை

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து சுவிற்சர்லாந்து குடியுரிமை பெறும் சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.

ஐரோப்பாவிலேயே, சுவிற்சர்லாந்து நாட்டில்தான் குடியுரிமை பெறுவதற்கு இறுக்கமான சட்டங்கள் உள்ளன. இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் சுவிற்சர்லாந்து குடியுரிமை சட்டம் இன்னும் இறுக்கமடையவுள்ளது.

சுவிற்சர்லாந்தில் சுமார் 20 இலட்சம் வெளிநாட்டவர்கள் வாழ்கின்ற நிலையில், குறித்த மாற்றத்தால் ஆறரை இலட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கு பிறகு C விசா உள்ளவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுவிஸ் சோசலிசக்கட்சி கலந்துரையாடல் ஒன்றினையும் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விடயம் குறித்து,

நாம் ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்கின்றோம், இதன் ஒரு பகுதியாக எதிர்வரும் 23 ஆம் திகதி Adliswil இல் ஒரு தகவல் வழங்கும் கலந்துரையாடல் ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த வருட முடிவுக்கு முன்னர் சுவிஸ் பிரஜாவுரிமை பெறுவதற்கு B, F விசாவில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதற்கான ஆலோசனைகளையும், உதவிகளையும் அவற்றை எப்படி செய்வது போன்ற விடயங்களையும் எடுத்துரைப்பதற்காக சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் Angelo Barrile மற்றும் மாகாணசபை, நகரசபை வருகை தர உள்ளனர் என சுவிஸ் சோசலிசக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த கலந்துரையாடல் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்