சத்தமிட்டு என்னை அழைக்கும்: சிலிர்க்கிறார் ரீங்காரச்சிட்டுகளின் தோழி

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்தை சேர்ந்தவர் மெலானி பார்போனி, லாஸ் ஏஞ்சல்ஸில் வானியல் மையத்தில் உதவி ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரை ரீங்காரச்சிட்டு(Humming Bird) ஆராய்ச்சியாளர் என்றே அழைக்கின்றனர், காரணம் இவரது அலுவலகத்துக்கு தினமும் 200 ரீங்காரச்சிட்டுகள் வருகின்றனவாம், மிக சந்தோஷமாக சுற்றித் திரியுமாம்.

சுவிற்சர்லாந்தில் இந்த பறவைகளே இல்லை, புத்தகத்தில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன், அமெரிக்கா வந்ததும் பறவைகளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

இதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு என் அலுவலக ஜன்னலில் உணவை வைத்தேன், பறவைகள் வந்தன.

இப்போது என்னுடன் நெருக்கமாகிவிட்டன, வேலைக்காரணமாக கவனிக்காவிட்டால் சத்தமிட்டு என்னை அழைக்கின்றன என நெகிழ்கிறார் மெலானி பார்போனி.

UCLA

UCLA

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...