30 வருடத்துக்கு முன்னர் காணாமல் போனவர் சடலமாக கண்டுபிடிப்பு

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
236Shares

ஜேர்மனியை சேர்ந்த நபர் ஒருவர் 30 வருடத்துக்கு முன்னர் காணாமல் போன நிலையில் பனிப்பாறை மலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சுவிற்சர்லாந்தின் Canton Of Valais-ல் மிகப்பெரிய பனிப்பாறை மலை ஒன்று அமைந்துள்ளது, கடந்த வாரம் இருவர் அங்கே சென்றிருந்த போது நபர் ஒருவரின் கையையும், ஷூக்களையும் கண்டுப்பிடித்துள்ளனர்.

அப்போது வானிலை மோசமாக இருந்ததால் அடுத்த நாள் குறித்த நபரின் மீதி உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.

பொலிசார் இதுகுறித்து கூறுகையில், உயிரிந்த நபர் 1943ல் பிறந்தவர் என்றும், கடந்த 1987ல் ஆகஸ்ட் மாதத்தில் தனது சொந்த நாடான ஜேர்மனியிலிருந்து காணாமல் போயுள்ளார் என கூறியுள்ளனர்.

இதே போல 1942ல் இறந்த தம்பதிகளின் உடல் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்