சுவிஸில் விமான விபத்து: விமான தளத்தில் மோதியதால் விபரீதம்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் விமானம் ஒன்று இழுத்துச் செல்லப்பட்ட போது விமான தளத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது, இந்த விபத்தில் விமானி பலத்த காயமடைந்துள்ளார்.

மொல்லிஸ் விமான நிலையத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனே விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் விமானியை மீட்டுள்ளனர்.

இழுத்துச் செல்லப்பட்ட விமானத்தின் விமானி தடைசெய்யப்பட்ட இடத்தில் தரையிறங்கியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விபத்திற்கான காரணம் குறித்து சுவிஸ் பெடரல் விமான அலுவலகம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments