பெண் காவலரை மயக்கி சிறையில் இருந்து தப்பிய கைதி: தண்டனை அதிகரிப்பு

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் பெண் காவலரை காதல் வயப்படுத்தி சிறையில் இருந்து தப்பிய கைதி ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.

சிரியா நாட்டை சேர்ந்த Hassan Kiko(28) என்பவர் 15 வயது சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக 4 ஆண்டுகள் தண்டனை பெற்று சூரிச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் Angelica Magdici என்ற பெண் காவல் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் ஆவர்.

இந்நிலையில், பெண் காவலருக்கும் கைதிக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து தப்பிக்க உதவுமாறு கைதி காதலியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு பெப்ரவரி 8-ம் திகதி இருவரும் சிறையில் இருந்து தப்பியுள்ளனர்.

7 வாரங்களாக பொலிசாரின் பிடியில் சிக்காத இருவரும் இத்தாலி நாட்டில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அந்நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், சுவிஸ் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் தன்னுடைய தவறுக்கு பெண் காவலர் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும், பெண் காவலரை மயக்கி தன்னுடைய திட்டத்திற்கு கைதி பயன்படுத்திக்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து கைதிக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments