சிறுவர்களை பாலியல் சித்ரவதை செய்த நபர்: 10 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் சிறுவர்களை பாலியல் சித்ரவதை செய்த நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சுமார் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சுவிஸில் உள்ள சூரிச் மாகாணத்தில் Roland W(51) என்ற நபருக்கு நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது.

நண்பர்களுடன் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த இவர் சிறுவர்களுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், சிறுவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் வந்துள்ளார்.

கடந்த 1994-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 சிறுவர்களிடம் இவர் அத்துமீறி நடந்துள்ளார்.

மேலும், சிறுவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுடன் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து வந்துள்ளார்.

இவ்விவகாரம் வெளியே தெரியவந்ததை தொடர்ந்து அவரது வீட்டை பொலிசார் சோதனை செய்துள்ளனர்.

அப்போது, அவரது கணிணியில் இருந்து 5,072 ஆபாச வீடியோக்கள் மற்றும் 31,162 ஆபாசப் புகைப்படங்களை பொலிசார் கைப்பற்றி அவரையும் கைது செய்தனர்.

நபர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்துள்ளது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று சூரிச் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, சிறுவர்களிடம் பாலியல் ரீதியாக நடந்துக்கொண்ட குற்றத்திற்காக 9 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு 52,000 பிராங்க் இழப்பீடும் வழங்க வேண்டும் எனக் கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments