மனைவியை 10 ஆண்டுகளாக சித்ரவதை செய்த கணவன்: கடுமையான தண்டனை கிடைக்குமா?

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் மனைவியை தொடர்ந்து 10 ஆண்டுகளாக சிதர்வதை செய்து வந்த கணவருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈராக் நாட்டை சேர்ந்த 50 வயதான கணவர் மற்றும் ஈரான் நாட்டைச் சேர்ந்த 35 வயதான மனைவி ஆகிய இருவரும் சுவிஸில் 1999-ம் ஆண்டு முதல் வசித்து வருகின்றனர்.

பேர்ன் நகரில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் இவர்களுக்கு 5 மற்றும் 9 வயதுகளில் பிள்ளைகள் உள்ளனர்.

சுவிஸில் குடியேறியது முதல் மனைவியை சித்ரவதை செய்யும் கொடூரம் தொடங்கியுள்ளது.

மனைவியின் விருப்பம் இல்லாமல் உடலுறவுக்கொள்வது, இயற்கைக்கு மாறான தன்னுடைய பாலியல் ஆசைகளை தீர்க்க மனைவியை கொடுமைப்படுத்துவது உள்ளிட்ட பல சித்ரவதைகளை கணவர் செய்து வந்துள்ளார்.

தன்னுடைய ஆசையை தீர்க்க மனைவி மறுப்பு தெரிவித்தால் அவரை அடிமைப்போல் நடத்துவதுடன் சரமாரியாக தாக்கி வந்துள்ளார்.

இதனால் மனைவியின் உடலில் ஆங்காங்கே ஆழமான காயங்களும் ஏற்பட்டுள்ளன.

மனைவி மட்டுமின்றி தன்னுடைய பிள்ளைகள் இருவரை அவர் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

2005-ம் ஆண்டு தொடங்கிய அவரது சித்ரவதை 2015-ம் ஆண்டு வரை தொடர்ந்துள்ளது.

பிள்ளைகளின் எதிர்காலத்தை கண்டு அச்சப்பட்ட தாயார் 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் துணிச்சலாக வீட்டை விட்டு வெளியேறி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

விசாரணையின் தொடக்கத்தில் தான் குற்றமற்றவர் என வாதாடிய கணவர் பின்னர் அவர் மீதான குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.

மனைவியை தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக சித்வதை செய்து வந்த கணவரின் வழக்கிற்கு எதிர்வரும் 13-ம் திகதி நீதிபதி தீர்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments