சுவிஸில் குடியுரிமை பெற புதிய கட்டுப்பாடுகள்: விரைவில் அமலாகிறது

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டம் விரைவில் அமலாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் உள்ள Vaud மாகாண அரசு தான் இந்த புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது.

சுவிஸில் குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்தவர்களில் கடந்த 2015-ம் ஆண்டு 4,100 பேர் வெற்றிகரமாக பெற்றனர். இந்த எண்ணிக்கையானது கடந்தாண்டு 7,300 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வாட் மாகாணத்தில் குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்யும் வெளிநாட்டினர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாட் மாகாண பொருளாதார தலைவரான Philippe Leuba என்பவர் வெளியிட்டுள்ள தகவலில் ‘வாட் மாகாணத்தில் குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்பவர்களிடம் 'C permit' கட்டாயம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பிரான்ஸ் மொழியை நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

இது மட்டுமில்லாமல், குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்யும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் முன்னர் வரை அரசு நிதியுதவியை பெற்றிருக்க கூடாது.

குடியுரிமை கோரும் வெளிநாட்டினர் மீது எவ்வித குற்றப் பின்னணிகள் இருக்க கூடாது.

மேலும், மாகாண நிர்வாகம் கேட்கும் சுமார் 500 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விரைவில் எதிர்வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அறிமுகமாக உள்ளது.

சுவிஸில் உள்ள இந்த வாட் மாகாணத்தில் குடியேறி குடியுரிமை கோரும் அனைத்து

வெளிநாட்டினர்களுக்கும் இந்த புதிய கட்டுப்பாடுகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments