210 கிலோ எடையுள்ள மாட்டிறைச்சியை கடத்திய பெண் கைது

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் 210 கிலோ எடையுள்ள இறைச்சியை கடத்தி வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை சுவிஸ் எல்லையோர காவலர்கள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கிழக்கு ஆசியாவில் உள்ள மங்கோலியா நாட்டை சேர்ந்த 56 வயதான் பெண் தற்போது சுவிஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் சுவிஸ் எல்லையில் நுழைய முயன்ற கார் ஒன்றை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

காரில் இருந்த பெண்ணிடம் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் பொலிசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

காரின் பின் இருக்கையை சோதனை செய்தபோது அங்கு மூட்டை மூட்டையாக இறைச்சி இருந்ததைக் கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அவற்றில் கோழி, மாட்டிறைச்சி மற்றும் பன்றியிறச்சி சுமார் 210 கிலோ வரை இருந்ததை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் இருந்து சுவிஸ் நாட்டிற்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.

ஆனால், பெண்ணிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதால் அவர் உடனடியாக பொலிசாரால் கைது செய்யப்பட்டார்,

மேலும், இறைச்சி பாதுகாப்பானதா என்ற சந்தேகம் எழுந்ததால் அவற்றை பறிமுதல் செய்து அழித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

பெண்ணிடம் கூடுதல் தகவல்களை சேகரித்துள்ள பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments