பேஸ்புக் பதிவை லைக் செய்த நபர் மீது வழக்கு: நடந்தது என்ன?

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் இனவெறியை துண்டும் வகையில் வெளியிடப்பட்ட பேஸ்புக் பதிவை லைக் செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் உள்ள சூரிச் நகரை சேர்ந்த 45 வயதான நபர் மீது தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூரிச் நகரை சேர்ந்த விலங்குகள் பாதுகாப்பு சங்கத் தலைவரான Erwin Kessler என்பவர் மீது அவதூறு பரப்பும் வகையில் பேஸ்புக்கில் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுமட்டுமில்லாமல், யூதரான இவரை கடுமையாக விமர்சித்து இனவெறியை தூண்டும் விதத்தில் அந்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், இவ்வாறு வெளியான 8 பதிவுகளை அந்த 45 வயதான நபர் லைக் செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சங்கத்தலைவர் நபர் மீது பொலிசாரிடம் புகார் தெரிவித்து அவர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளார்.

இதுக் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இனவெறியை தூண்டும் பதிவுகளை லைக் செய்தது குற்றம். இதனால் அந்த பதிவுகள் பலரையும் சென்றடையும்.

எவ்வித காரணமும் இன்றி இனவெறியை தூண்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நபர் பதிவுகளுக்கு லைக் செய்துள்ளதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபர் மீதான வழக்கு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு சிறை தண்டனை அல்லது கடுமையான அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டில் பேஸ்புக் பதிவினை லைக் செய்த காரணத்திற்காக ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments