சிறுமியை கற்பழித்த நபருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: அதிர்ச்சியில் பெற்றோர்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் 8 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் சொலுதூர்ன் மாகாண நீதிமன்றம் தான் இச்சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதே மாகாணத்தில் கடந்த 2006-ம் ஆண்டு 8 வயதான சலீனா என்ற சிறுமி வசித்து வந்துள்ளார்.

சலீனாவின் வீட்டிற்கு அருகே 32 வயதான வில்லியம் என்ற நபர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனியாக இருந்த சிறுமியை ஆசைக்காட்டி அழைத்துச்சென்ற வில்லியம் கொடூரமாக கற்பழித்துள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து வில்லியம் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்டனைக்காலம் முடிவடைந்து கடந்த நவம்பர் மாதம் வில்லியம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், நீதிபதி விதித்த தண்டனைக்காலத்திற்கும் கூடுதலாக ஒரு ஆண்டு மற்றும் 5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக வில்லியம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வில்லியமின் தரப்பு வாதம் சரியானது என நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 1,00,000 பிராங்க்(1,51,43,657 இலங்கை ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், நீதிபதியின் இந்த இழப்பீட்டு உத்தரவு தன்னையும் தனது பெற்றோரையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட சலீனா வேதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments