சிறுவனின் சிறுநீரகத்தை வெட்டி துண்டாக்கிய மருத்துவர்: நடந்தது என்ன?

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் சிறுவன் ஒருவனின் சிறுநீரகத்தை தவறுதலாக வெட்டி துண்டாக்கிய மருத்துவர் மீதான வழக்கு இன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.

சுவிஸில் உள்ள சூரிச் நகரில் பெயர் வெளியிடப்படாத பெற்றோர் இருவர் தங்களது மகனுடன் வசித்து வருகின்றனர்.

இவர்களது மத வழக்கப்படி பிறக்கும் ஆண் குழந்தையின் உறுப்பு தோலை நீக்கிவிடுவது முக்கிய சம்பர்தாயம் ஆகும்.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு யூலை மாதம் தங்களுடைய 4 வயது மகனுக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுவனின் சிறுநீரக மேல் தோலை நீக்கும் சிகிச்சையை மருத்துவர் செய்துக்கொண்டு இருந்துள்ளார். இதனை சிறுவனின் தந்தை நேரடியாக புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, ஒரு புகைப்படத்திற்கு சரியாக போஸ் கொடுக்குமாரு தந்தை கூறியவுடன் சிறுவன் திடீரென திரும்பியுள்ளான்.

இதனை சற்று எதிர்ப்பார்க்காத மருத்துவரின் கூரிய கத்தி சிறுவனின் சிறுநீரகத்தை வெட்டியுள்ளது. மேலும், சிறுநீரக உறுப்பு துண்டாகி தரையில் விழுந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை மருத்துவரை சரமாரியாக வசைப்பாடியுள்ளார். மருத்துவர் மிகவும் போராடியும் சிறுநீரகத்தை மீண்டும் இணைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை.

சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு சிறுவன் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பல மாதங்களாக நடைபெற்ற சிகிச்சைக்கு பிறகு சிறுநீரகம் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.

எனினும், சிறுவன் 18 வயதை அடையும்போது மட்டுமே அவற்றின் உண்மையான செயல்பாடு தெரியவரும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மகனின் சிறுநீரகத்தை வெட்டிய மருத்துவர் மீது பெற்றோர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, ‘தந்தை செய்த தவறால் தான் விபத்து ஏற்பட்டதாகவும், இதில் மருத்துவர் மீது எவ்வித குற்றமும் இல்லை’ என வாதிடப்பட்டது.

இருதரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பு நாளை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments