மருந்தாக பயன்படும் கஞ்சா: சுவிஸ்ஸில் வரப்போகும் அதிரடி சட்டம்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்தில் மருத்துவ விடயங்களுக்காக கஞ்சாவை வாங்க நினைப்பவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் பல்வேறு நோய்களுக்கு உதவும் பொருளாக கஞ்சா பயன்பட்டு வருகிறது, சட்டமே இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் சுவிஸ்ஸில் இருக்கும் Zurich நகரில் மக்கள் தங்கள் மருத்துவ தேவைக்காக கஞ்சாவை வாங்க அவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்க வேண்டும் அதிகாரிகள் கூறி வருகிறார்கள்.

இதை சுவிஸ் கூட்டாட்சி சுகாதார அலுவலகம் தான் வழங்க வேண்டும். ஆனால் பலர் கஞ்சாவை சட்டவிரோதமாக உட்கொள்வதால் இதை அனுமதிக்க சுகாதார அலுவலகம் யோசித்து வருகிறது.

ஆனால் இந்த விடயத்துக்கு நாடளுமன்றத்தில் எம்.பிக்களின் ஆதரவு அதிகம் உள்ளது. இது விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதே போல சுவிஸ் தலைநகரான பெர்னில் கஞ்சாவை மருந்து கடைகளில் விற்க விண்ணப்பித்துள்ள அதிகாரிகள் அதற்கான உத்தரவுக்கு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments