சுவிஸில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்து: உயிர் தப்பிய 160 பயணிகள்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் 7 பேர் காயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்தாலியில் உள்ள மிலான் நகரில் இருந்து Eurocity என்ற ரயில் 160 பயணிகளுடன் நேற்று காலை 10.15 மணிக்கு புறப்பட்டுள்ளது.

சுவிஸில் உள்ள பேசல் நகருக்கு 2.45 மணியளவில் வந்தடைய நேரம் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய சுவிஸில் உள்ள லூசேர்ன் நகருக்கு வந்தபோது சுமார் 2 மணியளவில் அந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மிதமான வேகத்தில் வந்த ரயில் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

ரயிலுன் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்திற்குள்ளானது. எனினும், பயணிகளின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.

7 பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டதால் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், இவ்வழியாக வந்த இரண்டு பயணியகள் ரயில்கள் உடனடியாக பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

ரயில் எதனால் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சில மணி நேர பரிசோதனைகளுக்கு பின்னர், ரயில் சேவை முழுமையாக சீரடைந்தது. சுவிஸில் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Michael Buholzer/AFP

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments