அஜாக்கிரதை காரணமாக பலியான மூதாட்டி: இரண்டு பெண்கள் படுகாயம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளதுடன் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் உள்ள St. Gallen நகரில் நேற்று இரவு 9 மணியளவில் 68 வயதான நபர் ஒருவர் லொறியை ஓட்டிச்சென்றுள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த லொறி சாலையில் அசுர வேகத்தில் திரும்பியபோது 75 வயதான மூதாட்டி மீது லொறி மோதியுள்ளது.

இதில், பலத்த காயம் அடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். லொறி ஓட்டுனரை கைது செய்துள்ள பொலிசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, நேற்று மாலை 5 மணியளவில் ஆர்கவ் நகரில் ஒரு மோசமான விபத்து நிகழ்ந்துள்ளது.

85 வயதான நபர் ஒருவர் தன்னுடைய காரில் சாலையில் பயணமாகியுள்ளார்.

அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் இரண்டு பெண்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் 73 மற்றும் 65 வயதான பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவ்விபத்து தொடர்பாக கார் ஓட்டுனரான முதியவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments