சுவிட்சர்லாந்தில் போதை பொருள் கடத்தல்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் 2.4 மில்லியன் பிராங்க் மதிப்பிலான போதை பொருளை கடத்தி வந்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பால்கன் நாடுகளில் ஒன்றான Montenegro நாட்டை சேர்ந்த 43 வயதான நபருக்கு தான் நீதிபதி இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கூரியர்களை உரிய இடத்தில் சேர்க்கும் வேலை பார்த்த வந்த இந்நபரிடம் அவரது முதலாளி ஒரு பெட்டியைக் கொடுத்து சுவிஸில் உள்ள ஒரு நபரிடம் சேர்க்குமாறு கூறியுள்ளார்.

மேலும், பெட்டியில் மரிஜுனா என்ற போதை மருந்து இருப்பதாக முதலாளி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து நீண்ட பயணம் மேற்கொண்டு அந்த நபர் கடந்த 2016-ம் ஆண்டு சுவிஸில் உள்ள பேசல் நகரை அடைந்துள்ளார்.

ஆனால், நபர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரது பெட்டியை சோதனை செய்த பொலிசார் அதில் ஹெராய்ன் போதை பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்த போதை பொருளின் எடை 15 கிலோ எனவும், இதன் மதிப்பு 2.4 மில்லியன் பிராங்க்(35,94,18,009 இலங்கை ரூபாய்) இருக்கும் என பொலிசார் மதிப்பிட்டுள்ளனர்.

போதை பொருளை பறிமுதல் செய்த பொலிசார் உடனடியாக அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணை நேற்று முன் தினம் பேசல் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, தன்னுடைய முதலாளி தன்னை தவறாக பயன்படுத்தியுள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும், பெட்டியில் போதை மருந்து இருப்பது தெரிந்த பின்னரே அவற்றை சுவிஸில் கடத்தி வந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபனம் ஆனது.

இதனை தொடர்ந்து போதை பொருளை கடத்தி வந்த குற்றத்திற்காக நபருக்கு 5 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments