மகனுடன் தற்கொலைக்கு முயன்ற தந்தை: கடும் தண்டனை விதித்த நீதிமன்றம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் மகனுடன் தற்கொலை செய்ய முயன்ற தந்தைக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சுவிஸில் உள்ள யூரா மாகாணத்தில் பெயர் வெளியிடப்படாத குடும்பம் ஒன்று வசித்து வருகிறது.

குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் தற்கொலை செய்துக்கொள்ள 29 வயதான தந்தை முடிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த யூலை மாதம் தனது 2 வயது மகனுடன் தற்கொலை செய்துக்கொள்ள புறப்பட்டுள்ளார்.

ஆனால், முன்னதாக தனது பேஸ்புக் பக்கத்தில் வருத்தம் தெரிவிப்பது போல் ஒரு தகவல் ஒன்றை பதிவு செய்துவிட்டு அருகில் உள்ள Creux-de-Van மலை உச்சிக்கு சென்றுள்ளார்.

தந்தையின் பேஸ்புக் தகவலை படித்த பொலிசார் சந்தேகம் அடைந்து உடனடியாக மலைக்கு சென்றுள்ளனர்.

மலையின் உச்சியில் தனது கைகளில் குழந்தையை வைத்துக்கொண்டு தற்கொலை செய்துக்கொள்ள தந்தை தயாராக இருந்துள்ளார்.

ஆனால், கீழே இருந்த பொலிசார் அவரது மனதை மாற்ற பேச்சுக் கொடுத்துள்ளனர். சுமார் 40 நிமிடங்கள் அவரிடம் பேசிய பொலிசார் அவரது மனதை மாற்றி கீழே கொண்டு வந்துள்ளனர்.

எனினும், மகனுடன் தானும் தற்கொலை செய்துக்கொண்ட குற்றத்திற்காக அவர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று முன் தினம் நீதிமன்றத்திற்கு வந்தபோது தந்தைக்கு 18 மாதங்கள் இடை நிறுத்தம் செய்யப்பட்ட சிறை தண்டனை வழங்குவதாக தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments