போதை மருந்தை நூதனமாக கடத்திய வாலிபர் அதிரடி கைது

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் வெளிநாட்டில் இருந்து போதை பொருளை கடத்தி வந்த வாலிபர் ஒருவர் அந்நாட்டு பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவிஸில் உள்ள பேர்ன் மாகாணத்தில் சில தினங்களுக்கு முன்னர் பொலிசார் வாகன பரிசோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

அப்போது, சாலையில் வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், வழியில் பொலிசார் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

ஓட்டுனரின் செய்கையால் சந்தேகம் வலுத்த பொலிசார் காரை பின் தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஓட்டனரை கீழே இறக்கிவிட்டு காரை சோதனை செய்துள்ளனர். ஆனால், காரில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கிடைக்கவில்லை.

எனினும், சந்தேகம் நீங்காத பொலிசார் ஓட்டுனரை அழைத்துச்சென்று அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.

அப்போது, அவரது வயிற்றில் மாத்திரைகள் வடிவில் ஏராளாமன பொருட்கள் இருந்ததை பொலிசார் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர், நபருக்கு சிகிச்சை அளித்து அப்பொருட்களை வெளியே எடுத்து பரிசோதனை செய்தபோது அவை அனைத்தும் கொக்கைன் வகை போதை மருந்து எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவத்தை தொடர்ந்து 2 கிலோ எடையுள்ள போதை பொருளை பொலிசார் பறிமுதல் செய்து 29 வயதான அந்நபரை சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments