சுவிஸில் மாயமான பெண்மணி உயிரிழந்த நிலையில் மீட்பு: கொலையா? தற்கொலையா?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மாயமான பெண்மணி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Grenchen பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. Grenchen பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் பெண்மணி ஒருவரின் உடல் கிடப்பத்தை கண்ட பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார், பெண்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் குறித்த பெண்மணி கடந்த மாதம் 26 ஆம் திகதியில் இருந்து மாயமானவர் என்றும், அவரது மகள் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் குறித்த 46 வயது பெண்மணியை தீவிரமாக தேடி வந்ததும் தெரிய வந்துள்ளது.

குறித்த பெண்மணி மாயமான டிசம்பர் 26 ஆம் திகதி, தமது குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து சன்னல் வழியே இவர் வெளியே குதித்து தப்பியுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்ததில் லேசான காயத்துடன் இவர் தப்பியதாகவும், ஆனால் அதன் பின்னர் இவர் குறித்த எந்த தகவலும் குடும்பத்தினருக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் மாயமானதாகவும் பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 5 தினங்களுக்கு பின்னர் குறித்த பெண்மணி உயிர் இழந்த நிலையில் மீட்கப்பட்டது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

குடியிருப்பில் இருந்து குறித்த பெண்மணி குதித்து வெளியேறியதன் காரணம் என்ன? அதன் பின்னர் அவர் ஏன் மாயமாக வேண்டும்? மாயமான பெண்மணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இது திட்டமிட்ட கொலையா என பல்வேறு கோணத்தில் பொலிசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments