3-வது மாடியிலிருந்து குதித்த தாயார்: அடுத்து நிகழ்ந்த அதிசய சம்பவம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் 3-வது மாடியிலிருந்து குதித்த தாயார் ஒருவர் திடீரென மாயமாக மறைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் உள்ள Graubunden மாகாணத்தில் 46 வயதான தாயார் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

கடந்த திங்கள் கிழமை அன்று Solothurn மாகாணத்தில் உள்ள தனது மகளை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இரவு நேரத்தில் இருவரும் உரையாடியபோது சுமார் 10.15 மணியளவில் திடீரென பால்கனி நோக்கி ஓடிய தாயார் அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.

இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த மகள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

ஆனால், மகள் பால்கனிக்கு சென்று பார்த்தபோது கீழே அவரது தாயார் திடீரென மாயாமாக காணாமல் போயுள்ளார்.

சில நிமிடங்களுக்கு பிறகு அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 3-வது மாடியில் இருந்து குதித்த தாயாரை காணாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், தாயார் தனது பணியை இழந்து விட்டதால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

எனினும், 3-வது மாடியில் இருந்து குதித்ததால் அவருக்கு நிச்சயம் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஏதாவது ஒரு மருத்துவரிடம் அவர் சிகிச்சை பெற செல்வார் என இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத்தில் 3-வது மாடியிலிருந்து குதித்து திடீரென காணாமல் போன தாயார் குறித்து அடையாளங்களை வெளியிட்டுள்ள பொலிசார் அவரை பற்றிய தகவல் அறிந்தவர்கள் உடனடியாக காவல் துறைக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments