பறவை போல பறக்கும் குட்டி விமானம்! விஞ்ஞானிகள் சாதனை

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

இறக்கையுடன் பறவை பறப்பது போலான சிறிய அளவிலான வானூர்தியை கண்டுபிடித்து சுவிற்சர்லாந்து விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் அசத்தியுள்ளனர்.

சிறிய ரக வானுர்தி என்பது அதிகளவில் கமெரா பொருத்தப்பட்டு வானத்தில் பறக்கும், அதில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவாகும்.

தற்போது சுவிற்சர்லாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் பறவை போன்ற இறக்கையை கொண்ட வானத்தில் எவ்வளவு காற்றடித்தாலும் தாங்ககூடிய ஒரு வானூர்தியை கண்டுபிடித்துள்ளார்கள்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், இதை கண்டுபிடிக்க பல சிரமங்களை நாங்கள் எதிர்கொண்டோம். பறவைகளை பற்றியும் அதன் இறக்கைகள் பற்றியும் நீண்ட ஆராய்ச்சி மேற்கொண்டோம்.

மேலும், வானில் எவ்வளவு அதிகமாக காற்று வீசினாலும் அதை சமாளித்து வானூர்தி பறக்கும் வகையிலும், காற்றின் வேகத்தையும் வானூர்த்தியின் எடையையும் சமநிலைக்கு ஏற்ப மாறும் வகையில் இது செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments