சொக்லேட் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி: முதன் முதலாக அறிமுகமாகும் சேவை

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
869Shares

சுவிட்சர்லாந்து நாட்டிலேயே முதன் முதலாக கழுதை பாலில் தயாரிக்கப்பட்ட சொக்லேட்கள் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Eurolactis என்ற நிறுவனம் தான் இந்த அதிரடி முயற்சியில் இறங்கியுள்ளது.

இதே நகரை சேர்ந்த பிரபல சொக்லேட் தயாரிப்பாளரான Gerard Fornerod என்பவருடன் இணைந்து இப்புது முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது.

Eurolactis நிறுவனத்தின் உரிமையாளரான Pierluigi Orunesu என்பவர் கடந்த 2014ம் ஆண்டு கழுதை பாலில் தயாரிக்கப்பட்ட சொக்லேட்டை எடுத்துக்கொண்டு வாட்டிகன் நகருக்கு சென்று அதை போப் பிரான்சிஸிடம் கொடுத்துள்ளார்.

அர்ஜெண்டாவில் பிறந்த போப் பிரான்சிஸ், அவர் கழுதை பால் குடித்து தான் வளர்ந்ததாக அவரே குறிப்பிட்டுள்ளார்.

போப் பிரான்சிஸை சந்தித்த பிறகு, சுவிஸில் முதன் முதலாக கழுதை பாலில் தயாரிக்கப்பட்ட சொக்லேட்டுகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவேன் எனக் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது முதன் முதலாக வாட்டில் உள்ள Morges நகரில் கழுதை பாலில் தயாரிக்கப்பட்ட சொக்லேட்டுகள் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசும்பால் மூலம் தயாரிக்கப்பட்ட சொக்லேட்டுகள் சிலருக்கு ஒவ்வான்மையை ஏற்படுத்தினால், கழுதை பால் மூலம் தயாரிக்கப்பட்ட சொக்லேட்டுகளை உண்ணலாம்.

மேலும், தாய்ப்பாலுக்கு அடுத்து விலங்குகள் பாலில் கழுதை பால் தான் சிறந்தது.

ஏனெனில், பிற விலங்குகள் பாலில் உள்ள கொழுப்பின் அளவை ஒப்பிடுகையில் கழுதை பாலில் கொழுப்பு மிகவும் குறைவு.

இதுமட்டுமில்லாமல், கழுதை பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் கிரேக்கர்களும் எகிப்தியர்களும் கழுதை பாலை அமிர்தமாக கருதினர்.

தற்போதைய காலத்திலும் அழகியாக வர்ணிக்கப்படும் கிளியோபாட்ரா கழுதை பாலில் தான் தினமும் குளித்து வந்ததாக வரலாற்றில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments