சிறுமியின் கால்களை உடைத்த அரசியல்வாதிக்கு ரூ.15 லட்சம் அபராதம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் சாலை விபத்து ஒன்றில் சிறுமியின் இரண்டு கால்கள் முறிவுக்கு காரணமான அரசியல்வாதி ஒருவருக்கு ரூ.15 லட்சம் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் FDP கட்சியின் முன்னாள் தலைவரான Philipp Muller என்பவர் மீது தான் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலின்போது ஃபிலிப் முல்லர் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

அப்போது, தனது மெர்ஸிடஸ் காரில் Lenzburg நகரை நோக்கி பயணம் செய்துள்ளார்.

ஓய்வில்லாமல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டதால் அவரால் சரியாக காரை ஓட்டமுடியவில்லை.

சில நிமிடங்களுக்கு பிறகு சாலைகளை இணைக்கும் சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 17 வயதான சிறுமியின் இரண்டு கால் எலும்புகளின் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தில் சிறுமிக்கு காயம் ஏற்பட்டதற்கு பொறுப்பேற்று ஃபிலிப் முல்லர் தனது பிரச்சாரத்தை ஒத்திவைத்தார்.

எனினும், அலட்சியம் காரணமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காக ஃபிலிப் முல்லர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், தற்போது வெளியான தகவலில் அவர் மீதான குற்றம் முற்றிலுமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு நீதிமன்றம் 10,000 பிராங்க்(14,94,806 இலங்கை ரூபாய்) அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments