சுவிஸிக்கு காத்திருந்த ஆபத்து..! முறியடித்த இத்தாலி பொலிஸ்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

இத்தாலியில் தீவிரமாக தேடப்பட்டு வந்த அல்பேனிய போதை மருந்து கடத்தல் மன்னன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதான BS என்ற கடத்தல் மன்னனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெற்று வரும் போதை மருந்து கடத்தலை ஒழிக்க பொலிசார், Kamarina போதை மருந்து 2 என்ற ஆபரேஷனை தொடங்கினார்.

அக்டோபர் 25ம் திகதி Ragusa நகரத்தில் உள்ள Sicilian பகுதியில் நடந்த சோதனையில் 21 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஆனால், இதில் கடத்தல் மன்னன் BS தப்பிவிட்டார்.

இந்நிலையில், புதிய தொலைபேசி ஒட்டுக்கேட்டல் மூலம் கிடைத்த தகவல் படி Brescia மாகாணத்தில் உள்ள ரயில் நிலையத்தில் வைத்து BSஐ பொலிசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அவர் மிலன் விட்டு வெளியேறி சுவிஸிக்கு தப்பி ஓடி புதிய வாழ்க்கையை தொடங்கும் திட்டத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட BS, தற்போது, San Vittore சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments