பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து: உடல் கருகி பலியான 28 பசுமாடுகள்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பண்ணை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 28 பசுமாடுகள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் Schwyz மாகாணத்தில் உள்ள Voderthal என்ற பகுதியில் தான் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை பிற்பகல் வேளையில் பண்ணை ஒன்றில் தீப்பிழம்புகள் வெளியேறுவதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவல் பெற்று அப்பகுதிக்கு சென்றபோது பண்ணையில் கடுமையான தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக 80 தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த கடுமையாக போராடியுள்ளனர்.

வீரர்களின் கடுமையான போராட்டத்தின் விளைவாக 13 பசுமாடுகள் வெளியேற்றப்பட்டன.

ஆனால், கரும்புகையை சுவாசித்த காரணமாக அவை அனைத்தும் சில நிமிடங்களில் உயிரிழந்தன.

எஞ்சிய 15 பசுமாடுகள் பண்ணைக்குள் சிக்கி தீயில் உடல் கருகி உயிரிழந்துள்ளன.

தீவிபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இவ்விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments