அமெரிக்க, ஐரோப்பாவை தொடர்ந்து சுவிஸை ஆட்டிப்படைக்கும் கோமாளிகள்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் கோமாளிகள் வேடமிட்டு சிலர் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் சம்பவம் நாட்டில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் பல வழக்குகள் பதிவுசெய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒரு வழக்கில், கோமாளி மற்றும் குரங்கு முகத்திரை அணிந்திருந்த இருவர் வழிப்போக்கர்களை கொடூரமாக பயமுறுத்தி உள்ளனர்.

மற்றொரு வழக்கில் கோமாளி வேடமிட்ட கால்பந்து வீரர்கள் குழுவை தாக்கியுள்ளனர். மற்றொரு சம்பவத்தில், கோமாளி வேடத்தில் ஒருவரின் வயிற்றில் பயங்கரமாக குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதுபோன்ற நாட்டின் பகுதிகளில் பல பேர் தாக்கப்பட்டுள்ளனர். இதுவரை குற்றவாளிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பொலிசார் எச்சரித்துள்ளனர்.

மேலும், இதுபோன்ற தாக்குதல் நிகழ்வுகள் முதலில் அமெரிக்காவில் இடம்பெற்றது. பின்னர், ஐரோப்பா, பிரித்தானியா நாடுகளுக்கு பரவியது என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments