ஊழியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய இயக்குனர்: பணியை பறித்த நிறுவனம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த பெண் ஊழியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய குற்றத்திற்காக அந்நிறுவன இயக்குனரின் பணி பறிக்கப்பட்டுள்ளது.

சூரிச்சில் உள்ள Unia நிறுவனத்தின் கீழ் செயல்படும் Zurich-Schaffhausen என்ற கிளை அலுவலகத்தின் இயக்குனராக Roman Burger(36) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவருக்கு இயக்குனர் ஆபாச குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

இவ்விவாகரம் தொடர்பான புகார் மேலிடத்திற்கு சென்ற நிலையில், இயக்குனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அவர் பணியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த நடவடிக்கையை எதிர்த்து இயக்குனர் புகார் பதிவு செய்துள்ளார்.

இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்துள்ளது.

இப்பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இயக்குனருக்கு புதிய வேலை கிடைக்கும் வரையில் அதற்கான பயிற்சியை நிறுவனம் அளிக்க தயார் என்றும், இப்பயிற்சிக்கு செலவிடப்படும் சுமார் 40,000 பிராங்க் தொகையை நிறுவனம் ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இம்முடிவை ஏற்றுக்கொண்ட இயக்குனர் ஜனவரி முதல் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments