உயிரை பறித்த அதிவேகம்: சுவிஸ் சாலையில் நிகழ்ந்த கொடூர விபத்து

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் Grisons மாகாணத்தில் உள்ள Grusch என்ற பகுதியில் தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

நேற்று பிற்பகல் வேளையில் மோட்டார் சைக்கிளில் 58 வயதான நபர் பயணம் செய்துள்ளார். நபருடன் 60 வயதான அவரது நண்பரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயண செய்துள்ளார்.

இந்நிலையில், நெடுஞ்சாலையில் இருவரும் அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது, முன்னாள் சென்றுக்கொண்டு இருந்த 58 வயதான நபர் திடீரென தனது மோட்டார் சைக்கிளின் பிரேக்கை அழுத்தியுள்ளார்.

இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் சில மீற்றர்கள் தூரத்தில் விழுந்துள்ளார்.

இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் உடனடியாக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் பெற்று வந்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், ஆழமான காயங்கள் ஏற்பட்டுருந்ததால் அந்நபர் அங்கேயே உயிரிழந்துள்ளார்.

சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது எதற்காக அவர் திடீரென பிரேக்கை பிடித்தார் என தெரியவில்லை.

இவ்விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments