ஆசிரியையுடன் கை குலுக்காத இஸ்லாமிய மாணவருக்கு ரூ. 7 லட்சம் அபராதம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் ஆசிரியருடன் கை குலுக்க மறுக்கும் இஸ்லாமிய மாணவர்களுக்கு ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சூரிச் மாகாணத்தில் உள்ள Therwil பள்ளியில் படித்து வந்த இஸ்லாமிய மாணவர்கள் இருவரின் செயல் சுவிஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த மே மாதம் சுவிஸ் ஆசிரியை ஒருவருடன் கை குலுக்க இந்த இரண்டு இஸ்லாமிய சகோதரர்கள் மறுத்த விடயம் ஒரு பூகம்பத்தை கிளப்பியது.

உறவினர் அல்லாத ஒருவருடன் கை குலுக்குவது என்பது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது என்பதால் இரு சகோதர்களும் மறுத்துள்ளனர்.

இதற்கு பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால், சகோதர்களில் ஒருவர் பள்ளியை விட்டு நின்றுள்ளார்.

இதனை தொடர்ந்து இஸ்லாமிய சகோதர்களின் பெற்றோர் நகர கவுன்சிலின் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றதிற்கு வந்துள்ளது. அப்போது, ஆசிரியருடன் இஸ்லாமிய மாணவர்கள் கை குலுக்க மறுப்பது குற்றமாகும்.

இதுபோன்ற செயல்களில் இஸ்லாமிய மாணவர்கள் ஈடுப்பட்டால், அவர்களுக்கு 5,000 பிராங்க் (7,51,301 இலங்கை ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டது.

இது தொடர்பாக கல்வி துறை அதிகாரியான Monica Gschwind என்பவர் பேசிய போது, ‘ஆசிரியருடன் கை குழுக்குவது என்பது சுவிஸ் கலாச்சாரத்தோட ஒன்றிய ஒரு விடயம். இதனை பின்பற்ற தவறுவது என்பது சுவிஸ் இறையான்மையை இழிப்படுத்துவதற்கு சமமாகும்’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

எனினும், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments