புர்காவுக்கு ஒரு நியாயம்! தொப்பிக்கு ஒரு நியாயமா..! கொதித்தெழுந்த நபர்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் உத்தியோகபூர்வு ஆவணங்களில் புர்காவுடன் கூடிய புகைப்படத்திற்கு அனுமதி உள்ள போது, தொப்பி மற்றும் தலைப்பட்டைகளுடன் இருக்கும் புகைப்படத்திற்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது என தேசிய கவுன்சிலர் Walter Wobmann கேள்வி எழுப்பியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் பள்ளிவாசல்களுக்கு தடை கோரிய தேசிய கவுன்சில், தற்போது புர்கா ஆடைக்கு தடை விதித்து கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வரும் விடயத்தில் மத்திய கவுன்சிலுக்கு சவால் விடுத்துள்ளது.

சூரிச் பாஸ்போர்ட் அலுவலகத்தின் படி, தற்போதைய நடைமுறையில் முகத்தை அடையாளம் காணக்கூடிய வகையில் புர்காவுடனான புகைப்படம் உத்தியோகபூர்வ ஆவணங்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள Walter Wobmann, தொப்பி அல்லது எளிய தலைப் பட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒருவர் புர்காவுடன் இருக்கும் புகைப்படத்திற்கு அனுமதியளித்து, தொப்பிவுடன் இருக்கும் புகைப்படத்திற்கு தடை விதிப்பது ஏற்க தக்கது அல்ல என கடுமையாக சாடியுள்ளார்.

இதே விதிகள் அனைவருக்கும் பொருந்தும் என தேசிய கவுன்சில் கோரியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments