பாலியல் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைக்குமா?

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

ஜெனீவாவை சேர்ந்த 25 வயதான ஒருவன் பல பாலியல் குற்றங்களை அரங்கேற்றி இருக்கிறான்.

2010 - 2011ம் ஆண்டு காலகட்டத்தில் தன் காதலியை சித்ரவதை செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய அவனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைவாசம் முடிந்து வெளியே வந்தவன், 2015 இல் மீண்டும் ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல்,கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளான்.

இந்த மாதிரி செயல்களில் அவன் தொடர்ந்து ஈடுபடுவதால் அவன் மனநலம் கோளாறு உடையவனா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இவரை சோதித்த மனநல மருத்துவர் கூறுகையில், மனநல ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருந்துகளால் குணப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவனுக்கு கோபம் அதிகமாக வருகிறது, அவர் செய்யும் குற்றத்தின் தீங்கு எவ்வளவு பெரியது என்பதை கூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் வெளியில் இருந்தால் சீர்கேடுகள் மீண்டும் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது என கூறியுள்ளார்.

குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments