நெடுஞ்சாலையில் வாகனத்தை பறக்கவிட்ட நபர்: தக்க பாடம் புகட்டிய பொலிசார்!

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் அதிவேகமாக வாகன ஓட்டிய நபர் ஒருவர் சுமார் நான்கு ஆண்டுகள் வரை சிறைதண்டனை சந்திக்க நேர்ந்துள்ளது.

வாலெய்ஸ் மாகாணத்தில் உள்ள A9 நெடுஞ்சாலையில் ஓட்டுநர் ஒருவர் சுமார் 223கி.மீ வேகத்தில் வாகனத்தை இயக்கியுள்ளார். இந்த நெடுஞ்சாலையில் அதிகபடியாக 120 கி.மீ வேகத்திலே வாகனத்தை இயக்க வேண்டும் என்பது விதி.

இதனையடுத்து சிறிது நேரத்தில் அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 24 வயதான ஓட்டுநருக்கு பொது அமைச்சகம் மற்றும் போக்குவரத்து சேவை துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வாலெய்ஸ் மாகாண பொலிசார் அளித்துள்ள தகவலில், அவர் விதியை மீறி கூடுதலாக 96 கி.மீ வேகத்தில் வாகனத்தை இயக்கிய குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படடும். மேலும், நான்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments