சுவிசில் கருணை கொலைகளை விரும்பி ஏற்கும் மக்கள்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கருணை கொலை அமைப்பு சமீபத்தில் நடத்திய கருத்து கணிப்பில், ஐம்பது வயதை தாண்டிய 63 சதவீதம் பேர் தாங்கள் கருணை கொலை மூலம் இறக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

ஜூரிச்சை சேர்ந்த அந்த அமைப்பு ஜேர்மன் மொழி பேசும் பகுதியில் 1036 பேர்களிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் முடிவு, முன்பு பிரஞ்ச் மொழி பேசும் மக்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வுடன் ஒத்து போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி அந்த அமைப்பின் தலைவர் saskia Frei கூறுகையில், கருணை கொலைக்கான விதிமுறைகள் சுலபமாக்கப்பட வேண்டும், பொலிஸ் விசாரணையெல்லாம் அதற்கு தளர்த்தப்பட வேண்டும்.

மருத்துவர்களே தற்கொலை செய்ய விரும்புவர்களுக்கு சரியான மருந்தை பரிந்துரைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தற்கொலை சட்டப்படி குற்றமில்லை என விதியுடன் இருக்கும் சில நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும்.

விருப்பமுள்ள கருணை கொலைகள் அங்கு அதிகரித்த வண்ணம் உள்ளது, இந்த விருப்பப்பட்ட கருணை கொலை மரணங்கள் அங்கு 'அசாதாரண மரணங்கள்' என்று கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments