கைது செய்ய முயன்ற பொலிஸ் அதிகாரியை கடித்த நாய்: தப்பி ஓடிய கைதி

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் கைதி ஒருவரை கைது செய்ய முயன்றபோது பொலிஸ் அதிகாரியை நாய் கடித்ததை தொடர்ந்து கைதி தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் துர்கவ் மாகாணத்தில் உள்ள Matzingen என்ற நகரில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே பகுதியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த 34 வயதான அகதி ஒருவர் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், முகாமில் அவர் பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்டு வந்ததாக புகார் வந்ததை தொடர்ந்து அவரை கைது செய்ய பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.

உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு கிடைத்ததை தொடர்ந்து ஒரு பொலிஸ் குழு இன்று காலை அகதிகள் முகாமை நோக்கி சென்றுள்ளது.

அப்போது, பொலிசாருடன் ஒரு பொலிஸ் நாயும் சென்றுள்ளது.

இந்நிலையில், கைது செய்ய இருந்த நபரை கண்டு பொலிசார் துரத்தியுள்ளனர். ஆனால், எதிர்பாராதவிதமாக பொலிஸ் நாய் பொலிஸ் அதிகாரியின் கையை பலமாக கடித்துள்ளது.

நாய் எதற்காக கடித்தது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த குழப்பத்தை பயன்படுத்திக்கொண்ட கைதி அருகில் இருந்த ஒரு காட்டுப்பகுதியில் நுழைந்து தப்பியுள்ளார்.

மேலும், காயம் ஏற்பட்ட பொலிஸ் அதிகாரி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் பேசியபோது, கைது செய்ய முயன்றபோது நிகழ்ந்த குழப்பம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், தப்பியுள்ள அகதியை விரைவில் கைது செய்வோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments