மதுபோதையில் நிர்வாணமாக வாகனம் ஓட்டிய நபர் கைது

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் மதுபோதையில் நிர்வாணமாக கார் ஓட்டிய நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Grenzach என்ற நகரில் போக்குவரத்து பொலிசார் நேற்று வாகன சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

அப்போது, அவ்வழியாக வந்த கார் மீது சந்தேகம் அடைந்த பொலிசார் அதனை நிறுத்திவிட்டு ஓட்டுனரை கீழே இறங்குமாரு கூறியுள்ளனர்.

ஓட்டுனர் காரை விட்டு இறங்கியதும் அவரை பார்த்த பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுமார் 41 வயதான அந்த ஓட்டுனர் மேல் சட்டை மட்டுமே அணிந்துள்ளார். கீழே எந்த உடுப்பும் இல்லாமல் அரை நிர்வாணமாக நின்றுள்ளார்.

மேலும், நபரிடம் சோதனை செய்ததில் அவர் மது மற்றும் போதை மருந்து அருந்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே காரை பரிசோதனை செய்தபோது காரிலும் 8 கிராம் அளவில் போதை மருந்து இருந்ததை தொடர்ந்து அவற்றை பொலிசார் பறிமுதல் செய்தனர்.

நபர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் சில ஆயிரம் பிராங்குகள் பிணையில் அவரை தற்காலிகமாக விடுதலை செய்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments