சூதாட்டத்தில் ஒரே நாளில் ரூ.112 கோடி ஜெயித்த கில்லாடி பெண்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் சூதாட்டம் விளையாடிய பெண் ஒருவர் ஒரே நாளில் ரூ.112 கோடி ஜெயித்து சாதனை கோடீஸ்வரியாக மாறியுள்ளார்.

சுவிஸில் உள்ள சூரிச் நகரில் ’கேசினோ’ என்று அழைக்கப்படும் பிரபல சூதாட்ட மையம் அமைந்துள்ளது.

சூரிச்சில் நேற்று கனமழை பெய்த நிலையில் மழையில் நனைந்தவாறு சூதாட்டம் விளையாட ஒரு பெண் வந்துள்ளார்.

விளையாட்டை தொடங்கிய அப்பெண் முதலில் 200 பிராங்க்(29,826 இலங்கை ரூபாய்) ஜெயித்துள்ளார். பின்னர், விளையாட்டை முடித்துக்கொண்டு வீடு திரும்ப எண்ணியுள்ளார்.

ஆனால், வெளியே கனமழை பெய்ததால் அந்த 200 பிராங்க் பணத்தை பயன்படுத்தி மேலும் சூதாடியுள்ளார்.

அப்போது, அப்பெண்ணிற்கு 7.5 மில்லியன்(111,82,87,942 இலங்கை ரூபாய்) ஜாக்பாட் அடித்துள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார்.

இந்த பெரும் தொகையில் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகை போக மீதிப்பணம் அப்பெண்ணிடம் வழங்கப்படும்.

ஒரே நாளில் கோடீஸ்வரியான அப்பெண் பணத்தை தனது பிள்ளைகளின் கல்விக்கு செலவிட உள்ளதாகவும், மேலும் சில நாடுகளுக்கு சுற்றுலா செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணமாக சூரிச்சில் உள்ள Kloten என்ற நகரை சேர்ந்த அப்பெண் குறித்து வேறு தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments