ஐரோப்பாவிற்கு பெருமை சேர்த்த சுவிட்சர்லாந்து

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

ஐரோப்பாவிலேயே மிக உயரமான அணைக்கட்டு சுவிட்சர்லாந்து நாட்டில் கோலாகலமாக திறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் உள்ள Glarus மாகாணத்தில் கடந்த 6 ஆண்டுகளாக இந்த அணையை கட்டும் பணி நடந்து வந்துள்ளது.

தண்ணீர் சேமிப்பது மட்டுமின்றி, இந்த அணைக்கு கீழ் மின்சாரம் தயாரிக்க கூடிய கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த அணை 1.54 கி.மீ தூரம் வரை பரந்துள்ளதால் சுவிஸின் மிக நீளமான அணை என்ற பெயரையும், ஐரோப்பாவின் மிக உயரமான அணை என்ற பெயரையும் பெற்றுள்ளது.

கடற்பரப்பில் இருந்து இந்த அணை சுமார் 2,474 மீற்றர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

திறமைவாய்ந்த 3,000 ஊழியர்களை கொண்டு கட்டப்பட்ட இந்த அணையின் மொத்த மதிப்பீடு 2.1 பில்லியன் பிராங்க் ஆகும்.

ஒரே நேரத்தில் இந்த அணையில் சுமார் 23 மில்லியன் லிற்றர் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

சுவிஸ் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உருவாகியுள்ள இந்த அணை கடந்த வாரம் கோலாகலமாக திறக்கப்பட்டது.

மேலும், பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ள இந்த அணை எதிர்வரும் 2017ம் ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments