வெளிநாட்டினர் உள்ளாடைக்குள் இருந்த விலையுயர்ந்த பொருள்: பதறிப் போன பொலிஸ்!

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் இரண்டு வெளிநாட்டினர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலிசார் நடத்திய விசாரணையில் இருவரும் ஜெனீவா நகரில் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பொலிசார் அளித்துள்ள தகவலில், டிராம் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த இரண்டு பேரை பின் தொடர்ந்தோம்.

டிராமில் அவர்கள் சுவிட்சர்லாந்து எல்லையை கடப்பதற்குள் அவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தோம்.

இருவரும் ஜோர்ஜியா நாட்டில் கடந்த 1964, 1977 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் என தெரியவந்தது. அவர்கள் ஜெனீவாவில் பல திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என நம்பினோம்.

பின்னர், அவர்களை சோதனை செய்ததில் 52 வயதுடைய நபர் தனது உள்ளாடைக்குள் சுமார் 205 கிராம் எடையுள்ள திருட்டு நகையை மறைத்து வைத்திருந்தார். அவை Meyrin பகுதியில் காணாமல் போன நகை என அடையாளம் காணப்பட்டது.

மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒருவர் உண்மையை ஒப்புக்கொண்டார். மற்றொருவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறுத்தார். இந்நிலையில் அவர்கள் இருவரும் பொது அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments