பணத்துக்காக நடத்தப்பட்ட மோசடி நாடகம்: இளம் பெண்ணின் பலே திட்டம்

Report Print Jubilee Jubilee in சுவிற்சர்லாந்து

ஜெனிவாவில் வயதான நோய் வாய்ப்பட்ட ஒருவரை, பணத்துக்காக இளம் பெண் ஒருவர் ஏமாற்றியுள்ளார்.

80 வயதை தாண்டிய முதியவர் மூளை பாதிக்கப்பட்டு ஞாபகத் திறனை இழக்கும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டார். பாதுகாப்புக்காக 28 வயதான ஒரு பெண்ணை வாரிசாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

5 வருடங்களுக்கு முன்னர் அந்தப்பெண் ஒரு உணவகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கையில், இந்த முதியவர் அப்பெண்ணை சந்தித்துள்ளார்.

கோடிக்கணக்காண பணம் மற்றும் விலை உயர்ந்த பங்களாவை கொண்ட அந்த முதியவர் தன் வாரிசாக அந்த பெண்ணை ஆக்க முடிவு செய்தார். அந்த பெண் ஏற்கனவே திருமணமானவள் ஆவார்.

அவர் பணத்துக்கு ஆசைப்பட்ட அந்த பெண், தான் மட்டும் வாரிசாக திட்டம் போட்டார்.

COMP என்னும் நிறுவனத்தில் வேலை செய்பவர் அந்த வயதான முதியவரின் மகனுக்கு உங்கள் தந்தையை சுற்றி சூழ்ச்சிகள் நடப்பதாக மொட்டை கடிதம் போட்டுள்ளார்.

இதனை அறிந்த தந்தை, வாரிசு மகளாக ஏற்றுக்கொண்ட அப்பெண்ணின் மீது சந்தேகம் எழுந்தததால், இந்த பிரச்சனையை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் முதற்கட்ட வாதத்தில், ஏமாற்றுக்காரர்களுக்கு மூன்று வருடம் தண்டனை வழங்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வாதத்தை முன் வைத்தார்.

இந்நிலையில் தீர்ப்பை வருகிற வியாழக்கிழமை(22 ஆம் திகதி) ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments