விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்: பாறையில் மோதி பலியான இளம்பெண்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் பாராகிளைடர் விளையாட சென்ற இளம்பெண் ஒருவர் பாறையில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாலைஸ் மாகாணத்தில் உள்ள Weisshorn என்ற பகுதியில் உள்ள மலையில் நேற்று 27 வயதான இளம்பெண் ஒருவர் பாராகிளைடர் மூலம் வானில் பறக்கும் விளையாட்டில் ஈடுப்பட்டுள்ளார்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 2186 மீற்றர் உயரத்தில் பெண் பறந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, பறந்துக்கொண்டு இருந்தபோது திடீரென பாராகிளைடரில் கோளாறு ஏற்பட்டு பெண்ணின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக பறந்துள்ளது.

சில வினாடிகளில் அசுர வேகத்தில் பறந்த பாராகிளைடர் பாறை மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில், பலத்த காயம் அடைந்த அப்பெண் உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால், சில நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் அப்பெண் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் என்றும் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்ததும் தெரியவந்துள்ளது.

பாராகிளைடர் விளையாடியபோது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments