போர் விமான விபத்தில் பலியான விமானி: தவறான உத்தரவால் நிகழ்ந்த விபரீதம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் போர் விமானம் ஒன்று மலையில் மோதிய விபத்தில் விமானி பலியானதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த திங்கள் கிழமை அன்று பேர்ன் மாகாணத்தில் இருந்து F/A-18 ரக போர் விமானம் ஒன்று பயிற்சிக்காக புறப்பட்டுள்ளது.

கீழே தரைத்தளத்தில் இருந்து அதிகாரி ஒருவர் போர் விமானத்தின் விமானிக்கு உடனடி உத்தரவுகளை பிறபித்து வந்துள்ளார்.

இந்நிலையில், விமானம் Meiringen என்ற பகுதியில் பறந்துக்கொண்டு இருந்தபோது தரைத்தளத்தில் இருந்த அதிகாரி எவ்வளவு உயரம் பறக்க வேண்டும் என்பது தொடர்பாக தவறான தகவலை விமானிக்கு அளித்துள்ளார்.

இந்த தகவலை உண்மை என் எண்ணி விமானத்தை அதிவேகத்தில் செலுத்தியபோது எதிரே இருந்த மலை மீது மோதி விமானம் நொறுங்கியுள்ளது.

இந்த விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானார். தரைத்தளத்திலிருந்து அதிகாரி மாற்று உத்தரவை விடுப்பதற்குள் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

தொடக்கத்தில் போர் விமானம் காணாமல் போனதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், ஹெலிகொப்டர் மூலம் தேடியதில் போர் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது விசாரணையில் ’மனித தவறு’ தான் விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments