குடிமக்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்: பொதுவாக்கெடுப்பு நடத்த சுவிஸ் முடிவு

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் குடிமக்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கையை தொடர்ந்து பொதுவாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

சுவிஸில் உள்ள டிசினோ மாகாண அரசு தான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

மிகப்பெரிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியின் ஆதரவுடன் இந்த கோரிக்கையை வலிறுத்தி பொதுவாக்கெடுப்பு நடக்கவுள்ளது.

இது தொடர்பாக டிசினோ மாகாண அரசு நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், டிசினோ மாகாணத்தில் உள்ள நிறுவனங்கள் குடிமக்களை புறக்கணித்து விட்டு வெளிநாட்டினர்களுக்கு குறைந்த ஊதியத்தில் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன.

இதனால், உள் மாகாண குடிமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, டிசினோ மாகாணத்தில் குடிமக்களை விட இத்தாலி நாட்டை சேர்ந்தவர்களே அதிகளவில் பணியில் இருந்து வருகின்றனர்.

இதே நிலை நீடித்தால், இம்மாகாணத்தை சேர்ந்த நபர்களுக்கு முற்றிலுமாக வேலைவாய்ப்பு கிடைக்காது என்றும், டிசினோ மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் என மாகாண நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நடைமுறையை தடுத்தி நிறுத்தி உள்நாட்டு குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் 25ம் திகதி பொது வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக டிசினோ மாகாண அரசு அறிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments