இரண்டு இளம்பெண்களை கற்பழித்து கொன்ற நபர்: கடுமையான தண்டனை கிடைக்குமா?

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள நபருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் வாட் மாகாணத்தை சேர்ந்த 40 வயதான நபர் ஒருவர் அதே பகுதியில் வசித்து வந்த 19 வயதான மேரி என்ற இளம்பெண்ணுடன் நண்பராக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு மே 13ம் திகதி மேரியை கடத்திய அந்த நபர் பிரிபோர்க் மாகாணத்தில் உள்ள ஒரு வனத்திற்கு கொண்டு சென்று கற்பழித்து கொலை செய்துள்ளார்.

இந்த குற்றம் தொடர்பாக நீண்ட தேடலுக்கு பின்னர் நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் தொடர்பாக பொலிசார் தகவல்கள் சேகரித்தபோது, அவர் கடந்த 1998ம் ஆண்டு 20 வயதான அவர் காதலியை கடத்தி கற்பழித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

மேலும், இந்த குற்றம் தொடர்பாக அவருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது. சிறைக்காலம் முடித்து தற்போது வெளியே வந்துள்ள அவர் மீண்டும் மேரி என்ற பெண்ணை கற்பழித்து கொலை செய்துள்ளதாக கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையில் அவர் குற்றவாளி என நிரூபனம் ஆனது. ஆனால், தீர்ப்பை எதிர்த்து நபர் மேல் முறையீடு செய்தார்.

ஆனால், தற்போது மேல்முறையீடு வழக்கிலும் அவர் குற்றவாளி என எவ்வித சந்தேகம் இன்றி நிரூபனம் ஆகியுள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக பொலிசார் மற்றும் வழக்கறிஞர் பேசியபோது, ‘குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் இந்த சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர். எனவே, அவருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக’ தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments