வாகன சோதனையில் சிக்கிய 2,10,000 யூரோ மதிப்புள்ள கடத்தல் பொருட்கள்! அதிர்ச்சியில் அதிகாரிகள்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிஸ், ஜேர்மனி எல்லை பகுதியில் ஜேர்மனி சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக வரிகட்டாமல் கொண்டு செல்லப்பட்ட 2,10,000 பிராங்குகள் மதிப்புள்ள ஆடம்பர விலை உயர்ந்த பொருட்கள் சிக்கியுள்ளன.

சுவிஸிலிருந்து ஜேர்மனி பிராங்பேர்ட்டுக்கு வாடகை காரில் பயணித்த சீனா நாட்டை சேர்ந்த நபர்களிடம் இருந்தே இந்த ஆடம்பர பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுங்க அதிகாரிகள் காரில் நடத்திய சோதனையில், 250 யூரோ மதிப்புள்ள சட்டை, 5700 யூரோ மதிப்புள்ள இரண்டு ஷூ, 1900 யூரோ மதிப்புள்ள பெல்ட், மற்றும் 167000 யூரோ மதிப்புள்ள ஒரு கைகடிகாரம், 11000 யூரோ மதிப்புள்ள மற்றொரு கைகடிகாரம் உட்பட மொத்தம் 2,10,000 யூரோக்கள் மதிப்புள்ள 9 ஆடம்பர பொருட்கள் சிக்கியதாக தெரிவித்துள்ளனர்.

வரிகட்டாமல் கொண்டு சென்ற அனைத்து பொருட்களையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் அனைத்து பொருட்களுக்கும் சேர்த்து மொத்தம் 43,000 பிராங்குகள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்செயலில் ஈடுபட்ட சீனா நாட்டை சேர்ந்தவர்களுக்கு கிட்டதட்ட வரி ஏய்ப்புக்கு நிகரான பிராங்குகளே அபராதமாக விதிக்கப்படும் என சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments