சுவிட்சர்லாந்தில் ஓரினச்சேர்க்கை ஜோடி மீது தாக்குதல்

Report Print Deepthi Deepthi in சுவிற்சர்லாந்து
620Shares

ஜெனிவாவில் ஓரினச்சேர்க்கை ஜோடி மீது தாக்குதல் நடத்தியதற்கு அந்நாட்டில் உள்ள ஓரினச்சேர்கையாளர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் கடந்த யூன் மற்றும் யூலை மாதங்களில் Perle du என்ற பகுதியில் ஓரினச்சேர்க்கை ஜோடி மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதில் ஒருவர் அக்கும்பலிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். மற்றொருவரை அக்கும்பல் கடுமையாக தாக்கியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சுயநினைவற்று உள்ளதாகவும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் தாக்குதல் குறித்து ஓரினச்சேர்க்கையாளர் அமைப்பான The Dialogai association கூறியதாவது, ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் இதை தடுக்க பொலிசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இதே பூங்காவில் தான் கடந்த 2103 ஆம் ஆண்டு ஓரினசேர்கையாளர்கள் தாக்கப்பட்டார்கள் எனவும் தெரிவித்தனர்.

தற்போது, பொலிசார் தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments