சாலையில் லொறியை முந்தியபோது நிகழ்ந்த விபரீதம்: பரிதாபமாக உயிரைவிட்ட வாலிபர்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
1283Shares

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சாலை ஒன்றில் லொறியை கடந்துச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபரீத விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் லூசேர்ன் மாகாணத்தை சேர்ந்த 25 வயதான வாலிபர் ஒருவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் நேற்று பயணம் செய்துள்ளார்.

மாலை 4.30 மணியளவில் Dagmersellen மற்றும் Sursee ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள A2 நெடுஞ்சாலையில் அந்த கொடூரமான விபத்து நிகழ்ந்துள்ளது.

வாலிபர் சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது அவருக்கு முன்னால் ஒரு லொறி சென்றுள்ளது.

மேலும், லொறியை வாலிபர் முந்திச் செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது.

அப்போது, வேகமாக சென்ற அந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக லொறியின் பின்புறத்தில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து வாலிபர் தூக்கி வீசப்பட்டுள்ளார். சாலையில் விழுந்து அவர் உயிருக்கு போராடியுள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ராகா மீட்புக்குழுவினர் ஹெலிகொப்டரில் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். மேலும், வாலிபரை ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

எனினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காததால் வாலிபர் பரிதாபமாக பலியானர்.

இவ்விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தியபோது லொறியை கடக்க முயற்சித்தபோது விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகித்து அதற்கான சாட்சியங்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments