வீடு புகுந்து கொள்ளையிட்ட நபர்: மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த ஓட்டுனர்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
442Shares
442Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் வீடு புகுந்து கொள்ளையிட்ட திருடனை ஓட்டுனர் ஒருவர் துணிச்சலாக தடுத்தி நிறுத்தி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சுவிஸின் சூரிச் மாகாணத்தில் உள்ள Volketswil என்ற நகரில் தான் இந்த துணிகர செயல் நிகழ்ந்துள்ளது.

இதே பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து நேற்று நள்ளிரவு வினோத சத்தம் அடிக்கடி எழுந்துள்ளது.

இதனை கூர்ந்து கவனித்த அருகில் குடியிருந்த ஒருவர் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற பொலிசார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில், கொள்ளையிட்ட நபர் வீட்டை விட்டு வெளியேறிச் செல்வதை தூரத்தில் இருந்த ஓட்டுனர் ஒருவர் பார்த்து விரைந்து சென்றுள்ளார்.

திருடனை கையும் களவுமாக பிடித்த அந்த ஓட்டுனர் அவரை அங்கேயே கட்டிப்போட்டு வைத்துள்ளார். மேலும், கொள்ளையிடுவதற்கு பயன்படுத்திய உபகரணத்தையும் அவர் பறிமுதல் செய்துள்ளார்.

சில நிமிடங்களுக்கு பிறகு பொலிசார் அங்கு வந்ததும் அந்த ஓட்டுனர் திருடனை பொலிசாரிடம் ஒப்படைத்தார்.

நள்ளிரவில் வீட்டை உடைத்து கொள்ளையிட்ட நபரை தனியாக துணிச்சலாக நின்று தடுத்து நிறுத்திய ஓட்டுனரை பொலிசார் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments