சுவிஸில் அதிகரிக்கும் வழிப்பறி சம்பவங்கள்: பொதுமக்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
424Shares
424Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லூசேர்ன் நகரில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லூசேர்ன் நகரில் வசித்து வரும் 45 வயதான பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது, திடீரென அவரை இரு வாலிபர்கள் வழிமறைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், பெண்ணிடம் இருந்த கைப்பை மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக லூசேர்ன் நகர பொலிசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், பெண்ணிடம் வழிப்பறி செய்த இரண்டு வாலிபர்களையும் தேடி வருகிறோம்.

லூசேர்ன் நகரில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களிடம் வழிப்பறி செய்வது அதிகரித்துள்ளது.

பெண்கள் மற்றும் முதியவர்கள் தனியாக வெளியே செல்லும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

குறிப்பாக, இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது சாலையில் வெளிச்சம் நிறைந்த பகுதிகளை பின்பற்றி செல்ல வேண்டும்.

மேலும், இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது தக்க துணையுடன் செல்வது பாதுகாப்பானது என பொலிசார் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments