ஐரோப்பிய நாடுகளில் போக்கிமோன் விளையாட்டு மோகம் படு தீவிரமாக உருவெடுத்துள்ள நிலையில் பறக்கும் விமானத்தில் போக்கிமோன் வேட்டையை நடத்த வேண்டாம் என சுவிஸ் விமானிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
போக்கிமோன் விளையாட்டு பிரியர்கள் ஹெலிகொப்டரை பயன்படுத்தியதாக வந்த தகவலை அடுத்து சுவிஸ் சிவில் விமான போக்குவரத்து அலுவலகமானது இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சுவிஸ் சிவில் விமான போக்குவரத்து அலுவலகத்தின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த தகவலில், சில விமானிகளின் தற்போதைய பொழுதுபோக்கு விமானிகளில் அறையில் வைத்து போக்கிமோன் ஆடுவதே என தெரிய வந்துள்ளது.
இதனால் பல பயணிகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். போக்கிமோன் ஆடுவது சட்டவிரோதமல்ல என்பதால் விளையாடுபவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது, மட்டுமின்றி விமான சட்டத்திட்டங்களிலும் இது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படவில்லை.
ஆனால் குறிப்பிட்ட விளையாட்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கவே முடியும் என கூறியுள்ள சுவிஸ் விமான போக்குவரத்து அலுவலகம், விமானத்தில் உங்கள் வேட்டையை வைத்து கொள்ளவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் போக்கிமோன் விளையாட்டு சுவிஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் மொத்தமும் 40 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய கால அளவில் அனைவரையும் வசப்படுத்தியுள்ளது.
ஸ்பெயிப் நாட்டில் பரபரப்பான சுரங்கப்பாதையில் இருந்து போக்கிமோன் வேட்டையில் இறங்கிய 2 ஜப்பான் நாட்டவரை பொலிசார் மீட்டு பத்திரமாக அவர்கள் தங்கும் விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.
பல இளைஞர்களும் இளவயதினரும் வாகன நெரிசல் மிகுந்த சாலைகளில் போக்கிமோன் சாத்தானை வேட்டையாட கிளம்புவது ஆபத்தில் முடியும் என எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சுவிஸ் போக்குவரத்து கழகம் விடுத்துள்ள எச்சரிக்கையில், போக்கிமோன் விளையாட்டு விரும்பிகள் தேவையற்ற சாகசங்களில் சென்று விழவேண்டாம் என குறிப்பிட்டுள்ளது.